ராமநாதபுரம் அருகேயுள்ள கள்ளர் தெருவைச் சேர்ந்தவர்கள் அருண் பிரகாஷ் (23), யோகேஷ்வரன் இவர்கள் இருவரும் தெருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், திடீரென இருவரையும் பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அருண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யோகேஷ்வரன் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்த யோகேஷ்வரனை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அருண் பிரகாஷ் உடல் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அசம்பாவதங்களை தவிர்க்க காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.