ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே நாகனேந்தல் விலக்கில் கிழக்கு கடற்கரைச் சாலையில் இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட.
இதில், கருங்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, அத்தானூரைச் சேர்ந்த உதயகுமார் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் உப்பூர் அனல் மின்நிலையப் பகுதியிலிருந்து தங்களது சொந்த ஊருக்குச் திரும்பிக்கொண்டடிருந்தனர்.
அப்போது, எதிரே தேவகோட்டையைச் சேர்ந்த வல்லரசு, ஹரிஹரன், சென்னையைச் சேர்ந்த சேமகவுதம் ஆகியோர் ஒரு இருசக்கர வந்துகொண்டிருந்தனர்.
அப்போது நாகனேந்தல் விலக்கு அருகே முன்னால் சென்ற காரை வல்லரசு முந்திச் சென்றபோது, எதிரே வந்த பாண்டித்துரையின் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
இதில் பாண்டித்துரை, வல்லரசு, ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த உதயகுமார், சேமகவுதம் ஆகியோர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.