நீலகிரி மாவட்டத்தில், கரோனா பாதிப்பு காரணமாக மலை ரயில் நிறுத்தப்பட்டதால் வனவிலங்குகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், குன்னூர் ஊட்டி மலை ரயில் பாதையில் வெலிங்டன் அருகே இன்று காலையில், சுமார் 50 அடி உயரத்தில் உள்ள பாறையில் இருந்து 13 வயதுடைய காட்டெருமை ஒன்று தண்டவாளத்தில் தவறி விழுந்தது . இதில், தலையில் பலத்த காயமடைந்த காட்டெருமை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பொதுப்பணித் துறையினர், ரயில்வே காவல் மற்றும் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அந்த ஆண் காட்டெருமையை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனர்.