சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் சென்னை வானகரத்தில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரது கணவர் திவாகர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருடைய மகன் சாய் பிரசாத் (14), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
கடந்த 20ஆம் தேதி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்ற சாய் பிரசாத் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த புஷ்பா அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் தேடியுள்ளார். எங்கு தேடியும் தனது மகன் கிடைக்காததால் புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாணவனை யாரேனும் கடத்திச் சென்றுள்ளனரா எனக் காவல் துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில், இன்று சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் காவல் ஆய்வாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகன் காணாமல்போன துக்கத்தில் தாய் கண்ணீர்விட்டு அழும் காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையுமம் படிங்க: தமிழ்நாட்டில் மூவாயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!