ETV Bharat / jagte-raho

ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கும் கும்பலிடமிருந்து 85 சவரன் நகைகள் மீட்பு - நகை திருடிய கும்பல் சென்னையில் கைது

சென்னை: ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

North india gang arrested for gold theft
Theft Gold recovered
author img

By

Published : Jan 13, 2020, 10:52 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் பேரில் நடமாடிய 5 வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனையடுத்து ஐந்து பேரையும் கடந்த 6ஆம் தேதி கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஓடும் ரயில்களில் பயணிகளை குறிவைத்து கொள்ளை அடிப்பவர்கள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

கொள்ளையர்கள் ராஜேஷ் குமார் (46), மதன்லால் (38), ராம்தியா (40), சுனில் குமார் (34), சுரேஷ்குமார் (39) ஆகிய 5 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தினர். இதில், மேலும் 60 சவரன் தங்க நகைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

ரயிலில் பயணிப்பவர்களிடம் நகையை கொள்ளையடித்துவிட்டு ஆந்திராவுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பின், பணம் தீர்ந்த நிலையில் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருட முயன்றபோது சிக்கியுள்ளதாக இவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

Intro:Body:ஓடும் ரயிலில் குறிவைத்து பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்...

நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் பேரில் நடமாடிய 5 வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதனையடுத்து ஐந்து பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் வட மாநிலங்களிலிருந்து வந்து ஓடும் ரயில்களில் குறிவைத்து பயணிகளிடம் கொள்ளை அடிப்பவர்கள் என்று தெரியவந்தது...

அதனுடைய அடிப்படையில் 5 பேரையும் கடந்த ஆறாம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. விசாரணையில் கொள்ளையர்கள் ராஜேஷ் குமார் வயது 46, மதன்லால் வயது 38, ராம்தியா வயது 40, சுனில் குமார் வயது 34, சுரேஷ்குமார் வயது 39 ஆகிய 5 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்...

இந்த நிலையில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்ததில் அவரிடமிருந்து மேலும் 60 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் ரயிலில் நகையை கொள்ளையடித்து விட்டு ஆந்திராவிற்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பணம் தீர்ந்த பின்பு மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருட முயன்ற போது சிக்கியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.