ETV Bharat / jagte-raho

நடுக்காட்டில் 6 வயது குழந்தைக்கு நிகழ்ந்த பயங்கரம்.! - திரிபுரா சம்பவம், பாலியல் பலாத்காரம்,

அகர்தலா: ஆறு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தவரை காவலர்கள் கைது செய்தனர்.

6 year old Raped  Tripura Rape case  Crime  Crime in Tripura  திரிபுராவில் பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு  திரிபுரா சம்பவம், பாலியல் பலாத்காரம்,  6-yr-old girl killed after rape in Tripura, accused held
6-yr-old girl killed after rape in Tripura, accused held
author img

By

Published : Feb 22, 2020, 3:50 AM IST

திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்திலுள்ள கோரகப்பா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் கச்ஹாச்லா. இவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தப் பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறு வயது பெண் குழந்தை தோழி.

இரு குழந்தைகளும் வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் அன்றைய தினம் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை காணவில்லை. இதையடுத்து அக்குழந்தையின் பெற்றோர் அப்பகுதி முழுக்க தேடினர். எனினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடுக்காட்டில் அப்பெண் குழந்தை உயிரற்ற நிலையில் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தன.

குழந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுத பெற்றோர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த கச்ஹாச்லா மீது காவலர்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை வன்புணர்வு செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஒரு தலைக் காதல் விவகாரம்: பெண்ணுக்கு தீ வைத்த நடத்துனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.