சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை இயக்கத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் பாண்டியன்.
இவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 1.37 கோடி ரூபாய், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருள்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் உள்ளிட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
இதைத்தொடர்ந்து பாண்டியனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பாண்டியனுக்கு சொந்தமான சென்னை வங்கிகளின் லாக்கரை திறப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் வங்கியின் ஒப்புதல் பேரில் இன்று லஞ்ச ஒழிப்புதுறையினர் பாண்டியனின் வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது கணக்கில் வராத பணம் 50 லட்சத்து 500 ரூபாயை இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு குவியும் பாராட்டு!