ETV Bharat / jagte-raho

தபால் அலுவலரை திசை திருப்பி 48 ஆயிரம் ரூபாய் திருட்டு!

புதுச்சேரி : தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறி அலுவலர்கள் கவனத்தை திசைத் திருப்பி 48 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற மூன்று பேரை, காவல் துறையினர் சிசிடிவி காட்சியைக் கொண்டு தேடி வருகின்றனர்.

post office
post office
author img

By

Published : Oct 23, 2020, 10:59 PM IST

புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த மூன்று பேர், சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என தபால் நிலைய அலுவலர் லட்சுமி நரசிம்மரிடம் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர் திரும்பி அங்கிருந்த விண்ணப்பப் படிவத்தை எடுத்த இடைவெளியில், அங்கிருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளில் 48ஆயிரம் ரூபாயை மூன்று பேரும் திருடியுள்ளனர். தொடர்ந்து, அமைதியாக அங்கிருந்து மூவரும் நழுவியுள்ளனர்.

இந்நிலையில், மூவர் மீதும் சந்தேகமடைந்த லட்சுமி நரசிம்மன் தனது பொறுப்பில் இருந்த அலுவலகப் பணத்தை சரிபார்த்தபோது, 48 ஆயிரம் ரூபாயை மூவரும் திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இது தொடர்பான சிசிடிவி காட்சியைக் கொண்டு மூவரையும் தேடி வருகின்றனர்.

திட்டம்போட்டி 48 ஆயிரம் திருடிய மூவரின் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க: ராணுவ வீரர்களை அவமதித்த மோடி - ராகுல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.