மதுரை திருப்பாலை அருகேயுள்ளது சிறுதூர். இங்குள்ள ஜவஹர்லால்புரம் மெயின் ரோட்டில் முன்விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அதிகாலையில் முருகன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக முருகனின் மனைவி முத்துச்செல்வி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்காக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை காவல்துறையினரின் தீவிர விசாரணைக்குபிறகு, கிருஷ்ணன் (47), பாண்டியராஜன் என்ற தீபக் (24), ,அஜித்குமார் (24), அமீர்கான் (24), பாண்டி (24) ஆகிய ஐந்து நபர்களை 24 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்களில் மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் கிருஷ்ணன், கிருஷ்ணனின் மகன் பாண்டியராஜன் என்ற தீபக், ஆனையூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பாண்டி ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: +2 மாணவிக்கு பாலியல் தொல்லை! - இருவர் போக்சோவில் கைது!