தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சாலையில் சிவன் சீர்மிகு மனமகிழ் மன்றம் உள்ளது. இங்கு புத்தாண்டு அன்று மாலையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திருக்காட்டுப்பள்ளி துணை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் காவலர்கள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, திருக்காட்டுப்பள்ளி லைன் கரையைச் சேர்ந்த பன்னீர் (64), முல்லைக்கொடி நடு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(33), ஒன்பத்துவேலி காமராஜர் காலனியைச் சேர்ந்த உமாதேவன் (55), சென்னான்டார் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (38), ரங்கநாதபுரம் காலனி தெருவைச் சேர்ந்த மகேஷ் (30), அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (32), குமரேசன் (27), மகாதேவன் (23), செந்தலை அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கடேஷ்(72), வானராங்குடி கீழ் தெருவைச் சேர்ந்த கங்காதரன்(37), அடஞ்சூர் குடியான தெருவைச் சேர்ந்த வீரராகவன் (32), மைக்கேல்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த சாலி (35), கருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (39), நடுக்காவேரி மேலத் தெருவைச் சேர்ந்த வீரமணி (58), நத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யா ராசு(52), மைக்கேல்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்த ரவி(56), கழுமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(50), திருச்சினம்பூண்டி சால்வன் பேட்டை தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (38), பழமனேரி உடைப்பு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம்(54) ஆகிய 19 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிதற்காக கைது செய்து அவர்களிடமிருந்து 5100 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இருதரப்பினருக்கு இடையே மோதல் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு