திருவண்ணாமலை செல்வா நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (30). லாரி ஓட்டுநராக பணியில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா தற்போது பிரசவத்துக்காக அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று (ஜன.6) காலை பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த சிலம்பரசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 16 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி மற்றும் 66 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிலம்பரசன் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம் காவல் துறையிடம் புகார் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு