மஹாராஷ்டிரா மாநிலம் , நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் உரையாற்றிய மோகன் பகவத் தற்போது ஞானவாபி விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது , இந்த சர்ச்சையை பெரிதாக்கக் கூடாது என்றார். இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது என தெரிவித்தார்.
இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்களை அணுகும் போது , நீதித்துறையின் தீர்ப்பை ஏற்க வேண்டும் , கேள்விகளை எழுப்பக் கூடாது என்றும் நீதித்துறையை புனிதமாகவும் , உன்னதமாகவும் கருதி தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஆர்எஸ்எஸ் எந்த விதமான வழிபாட்டையும் எதிர்க்கவில்லை என குறிப்பிட்ட மோகன் பகவத் , அனைத்தையும் புனிதமாக கருதுவதாகவும் மதம் மாறியவர்கள் அந்த வழிபாட்டை ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் நம் ரிஷிகள், முனிகளின் வம்சாவளியினர் எனவும் நாமும் அதே முன்னோர்களின் வம்சாவளியினர் எனவும் பேசினார்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தில் 2 மசூதிகள்: நிலத்தை மீட்க நவநிர்மாண் சேனா போராட்டம் அறிவிப்பு!