ETV Bharat / international

ஹிஜாப் அணிய மறுத்த பெண் பத்திரிகையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர் - ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்ததால், ஈரான் அதிபர் பேட்டியை ரத்து செய்துள்ளார்.

ஹிஜாப் அணிய மறுத்த பெண் பத்திரிகையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

author img

By

Published : Sep 23, 2022, 9:42 AM IST

ஈரான் நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வண்ணமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அவ்வாறு முறையாக அணியாதவர்களை கண்காணிக்க ‘காஷ்ட்-இ-எர்சாத்’ (Gasht-e Ershad) என்ற அறநெறி காவல்துறை தனியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 22 வயதான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற பெண், ஈரான் தலைநகரான தெஹ்ரான் சென்றபோது முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, அவரை அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் அவர் இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அமினி உயிரிழந்தார்.

  • Protests are sweeping Iran & women are burning their hijabs after the death last week of Mahsa Amini, following her arrest by the “morality police”. Human rights groups say at least 8 have been killed. Last night, I planned to ask President Raisi about all this and much more. 1/7

    — Christiane Amanpour (@amanpour) September 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இச்சம்பவம் ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் பெண்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர்.

தொடர்ந்து ஹிஜாப் உடையை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகமடைந்து வருகிறது.

இதனிடையே சிஎன்என் (CNN) ஊடகம், பிரிட்டிஷ்-ஈரானியத்தைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர் கிறிஸ்டியன் அமன்பூர் உடனான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் நேர்காணலுக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பத்திரிகையாளர் அமன்பூர் ஹிஜாப் அணியாமல் இருந்துள்ளார். எனவே, அதிபரின் உதவியாளர் அமன்பூரை ஹிஜாப் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த அமன்பூர், ‘இது ஆடை கட்டுப்பாடுகள் கொண்ட ஈரான் அல்ல. இது அமெரிக்கா’ என கூறி, ஹிஜாப் அணிய மறுத்துள்ளார்.

இவ்வாறு பெண் பத்திரிகையாளர் அமன்பூர் ஹிஜாப் அணிய மறுத்ததால், அதிபர் இப்ராஹிம் ரைசி பேட்டியை ரத்து செய்துள்ளார். இதனால் அதிபர் இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் முதன்முறையாக கொடுக்க இருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரானில் ஹிஜாப் சட்டத்தால் பறிபோன இளம் உயிர் - ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் போராட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.