கெய்ரோ: இதுகுறித்து எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஹூர்ஹாடா அருகே உள்ள செங்கடலில் குளித்துக்கொண்டிருந்த 68 வயதான ஆஸ்திரிய பெண் நேற்று (ஜூலை 3) சுறா தாக்கி உயிரிழந்தார். அதோ நாளில் சாஹல் ஹஷீஷ் கடற்கரையில் 40 வயதான ருமானிய பெண் சுற்றுலா பயணி சுறா தாக்கி உயிரிழந்தார்.
இரண்டு சம்பவங்களும் 600 மீட்டர் இடைவெளியில் நடந்துள்ளது. இருவரது குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். இந்த அசாதரண சூழல் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு ஹூர்ஹாடா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த ஆஸ்திரிய பெண் ஐந்து ஆண்டுகளாக எகிப்தில் வசித்துவந்தார். அவரை சுறா தாக்கும்போது கரையிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: டென்மார்க் ஷாப்பிங் காம்ப்ளக்சில் துப்பாக்கிச் சூடு... 3 பேர் உயிரிழப்பு...