ETV Bharat / international

த்ரெட்ஸ் செயலி ஒரு 'காப்பிகேட்' - சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் மிரட்டல்! - மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

ட்விட்டரின் அறிவுசார் சொத்துக்களைத் திருடி, அதன் மூலம் த்ரெட்ஸ் செயலியை மெட்டா உருவாக்கியிருப்பதாகவும், இது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Twitter
ட்விட்டர்
author img

By

Published : Jul 7, 2023, 1:47 PM IST

சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஊழியர்கள் பணிநீக்கம், ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்விட்டர் பதிவுகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த சூழலைப் பயன்படுத்தி ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க பல நிறுவனங்கள் முயற்சித்தன.

அந்த வகையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ட்விட்டருக்குப் போட்டியாக "த்ரெட்ஸ்" (Threads) என்ற வலைதளத்தை உருவாக்கினார். இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்ட த்ரெட்ஸ் செயலி கடந்த 5ஆம் தேதி நள்ளிரவில் அறிமுகப்படுத்ததப்பட்டது. தமிழ் எழுத்தின் 'கு' வடிவில் உள்ள அதன் லோகோ உள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த த்ரெட்ஸ் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த தளம் ட்விட்டரைப் போலவே முழுவதும் டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இதில் பயனர்கள் டெக்ஸ்ட்டாக தங்களது கருத்தை தெரிவிக்கலாம், 500 எழுத்துகள் வரை கருத்துப் பதிவிடலாம். இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். த்ரெட்ஸ் செயலியின் பல அம்சங்கள் ட்விட்டரைப் போலவே இருப்பதால், ட்விட்டர் பயனர்கள் த்ரெட்ஸ் செயலியை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், த்ரெட்ஸ் செயலி தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் சார்பில் அலெக்ஸ் ஸ்பைரோ என்ற வழக்கறிஞர் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மெட்டா நிறுவனம் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை வேலைக்கு எடுத்து, அவர்கள் மூலம் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துகளைத் திருடி, அதனை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியே ட்விட்டரைப் போன்ற 'த்ரெட்ஸ்' செயலியை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் அறிவுசார் சொத்துகளைப் பயன்படுத்துவதை மெட்டா நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான செய்திக்கு கமென்ட் செய்துள்ள எலான் மஸ்க், போட்டி என்பது நல்லதுதான், ஆனால் ஏமாற்றுவது சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மெட்டா செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் மறுத்துள்ளார். த்ரெட்ஸின் பொறியியல் பிரிவில் ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் யாரும் இல்லை என்றும், இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார். த்ரெட்ஸ் செயலிக்கு எதிரான ட்விட்டர் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுகள், எலான் மஸ்க் த்ரெட்ஸ் செயலியை ட்விட்டருக்கு போட்டியாகவும், அச்சுறுத்தலாகவும் பார்க்கிறார் என்பதையே உறுதிப்படுத்துவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Threads app: ட்விட்டருக்கு மாற்றாக களமிறங்கிய மெட்டாவின் "த்ரெட்ஸ்" - தமிழ் எழுத்தின் 'கு' வடிவில் லோகோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.