ETV Bharat / international

ஹிஜாப் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மேடையிலேயே முடியை வெட்டிக்கொண்ட பாடகி - முடியை வெட்டிய பாடகி

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், துருக்கி பாடகி மேடையிலேயே தனது முடியை வெட்டினார்.

Turkish
Turkish
author img

By

Published : Sep 29, 2022, 6:48 PM IST

டெஹ்ரான்: ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவல்துறையில் சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட இளம்பெண் மஹ்சா அமினி(22) கோமா நிலைக்கு சென்று, பிறகு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ஏராளமான பெண்கள் ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரான் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், துருக்கி பாடகி மெலக் மோஸ்சோ தனது முடியை வெட்டியுள்ளார். மெலக் மோஸ்சோ நிகழ்ச்சி நடக்கும் மேடையில் நின்று, கத்தரிக்கோளால் தனது கூந்தலை வெட்டினார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதையும் படிங்க: ஈரானில் ஹிஜாப் சட்டத்தால் பறிபோன இளம் உயிர் - ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.