வாஷிங்டன் (அமெரிக்கா): இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக வராது என ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அலுவலரான எலோன் மஸ்க் இந்த வாசகத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது. The Vergeஇன் அறிக்கையின்படி, புதிய Twitter Blue டிக் சந்தாவிற்குப் பயனர்களிடமிருந்து USD 19.99 (ரூ 1600 க்கு மேல்) வசூலிக்க எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இது ட்வீட்களைத் திருத்துதல் மற்றும் அழித்தல் போன்ற கூடுதல் அம்சங்களைக்கொண்டு வருகிறது. தற்போதைய திட்டத்தின்கீழ், சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு அவர்களின் நீலநிற சரிபார்ப்பு அடையாளத்தைப் பெற 90 நாட்கள் அவகாசம் தரப்படும். அதற்குள் அவர்கள் உரிய சந்தா செலுத்தவில்லையென்றால், ப்ளூ டிக் அடையாளத்தை இழக்க நேரிடும்.
ப்ளூ டிக் தொடர்பான திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த அம்சத்தை முடித்துக்கொடுக்க, நவம்பர் 7ஆம் தேதி வரை காலக்கெடுவாகும்; அதனை முடிக்கவில்லையென்றால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அதன் பயனர் சரிபார்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்யும் என்று மஸ்க் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்ட அறிக்கை வருகிறது. எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. முழு சரிபார்ப்பு செயல்முறையும் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது, என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டர் ப்ளூ சந்தா சில வெளியீட்டாளர்களிடமிருந்து விளம்பரமில்லா கட்டுரைகளைப் பார்ப்பதற்கும், வெவ்வேறு வண்ண முகப்புத் திரை ஐகான் போன்ற பயன்பாட்டில் மாற்றங்களைச்செய்வதற்கும் ஒரு வழியாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கும் முன்பு, இதற்குண்டான பணிகள் தொடங்கப்பட்டன.
ஏப்ரல் மாதம், ட்விட்டர் சமூக ஊடக சேவையை தனிப்பட்ட முறையில் வாங்குவதற்கு எலோன் மஸ்க் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், ட்விட்டர் சேவையில் உள்ள ஸ்பேம் மற்றும் போலிக் கணக்குகளின் எண்ணிக்கையை போதுமான அளவில் வெளியிடத் தவறிவிட்டது என்றும் எலோன் மஸ்க் குற்றம்சாட்டினார்.
ஜூலை மாதம், ட்விட்டரை வாங்குவதாக போட்ட ஒப்பந்தத்தை எலோன் மஸ்க் நிறுத்தினார். டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலரான அவர், ட்விட்டர் போலி கணக்குகளின் எண்ணிக்கையை தவறாக சித்தரிப்பதன் மூலம் அவர்களது விற்கும் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டினார்.
ஒப்பந்தம் முடிவடையும் அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பிறகு, சந்தை கடுமையான சரிவைக் கண்டது. பின்னர், விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற எலோன் மஸ்க் குற்றம்சாட்டுவதாக ட்விட்டர் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரம், முதலில் ஒப்புக்கொண்ட ஒரு பங்குக்கு USD 54.20 என்ற தொகையிலேயே, ட்விட்டரை எலோன் மஸ்க் வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 'சத் பூஜை' கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்..