உவால்டே(டெக்ஸாஸ்): அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டேயில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் , ஒரு ஆசிரியர் உட்பட மொத்தம் 21 பேர் பலியாகினர். அனைவரையும் சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞனும் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நியூடவுனில் அமைந்துள்ள சாண்டி ஹீஇக் தொடக்கப்பள்ளியில் நேற்று திடீரென நுழைந்த இளைஞர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 14 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இளைஞர் காவல்துறையின் பதில் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதையடுத்து அந்த உவால்டே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்த திடீர் தாக்குதலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் நிறவெறி தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை நடந்த நிகழ்வுகளில் டெக்சாஸ் வரலாற்றில் மிகக் கொடிய துப்பாக்கிச் சூடு இதுவாகும், மேலும் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடுகளில் ஒன்று என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டில், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேரை பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக பரவும் குரங்கு அம்மை வைரஸ்!- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்