ETV Bharat / international

இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல்... அமெரிக்க பெண்மணி கைது - இந்திய வம்சாவளி பெண்கள்

அமெரிக்காவில் நான்கு இந்திய வம்சாவளி பெண்களை, அமெரிக்க பெண் தாக்கும் வீடியோ சமூக வலைதலைங்களில் வைரலான நிலையில், அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்க பெண்மணி கைது
அமெரிக்க பெண்மணி கைது
author img

By

Published : Aug 26, 2022, 10:37 AM IST

Updated : Aug 26, 2022, 10:53 AM IST

வாஷிங்டன்: ஒரு பெண், நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் மீது நிறவெறி தாக்குதல் மேற்கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. மீண்டும் இந்தியாவுக்கே திரும்பும்படி அந்த வீடியோவில் அமெரிக்க பெண் அராஜகமான முறையில் பேசியிருந்தார்.

'இந்தியர்களை வெறுக்கிறேன்...': வீடியோவில் பதிவான சம்பவம், டெகசாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் ஒரு பார்கிங் பகுதியில் நேற்று முன்தினம் (ஆக. 24) இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், அராஜாகமான முறையில் நடந்துகொண்ட பெண் மெக்ஸிகன்-அமெரிக்கன் என தெரியவந்தது. அந்த பெண்மணி, பலானோ பகுதியைச் சேர்ந்த எஸ்மரால்டா உப்டான் என்பவர் என அடையாளம் போலீசாரால் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பலானோ போலீசார் நிறவெறி தாக்குதல் மேற்கொண்ட மெக்ஸிகன் - அமெரிக்கன் பெண்ணை கைது செய்து, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. வைரலான அந்த தாக்குதல் வீடியோவில் அந்த மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண்மணி,"இந்தியர்களாகிய உங்களை நான் வெறுக்கிறேன். சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் அமெரிக்கா வருகின்றனர்" என ஆதங்கமாக கூறிய அவர், அடிக்கடி ஆபாச வார்த்தையையும் அதில் பயன்படுத்தியுள்ளார்.

எங்கும்... எப்போதும்... இந்தியர்கள்: தொடர்ந்து அந்த வீடியோவில்,"நான் எங்கே போனாலும், அங்கு இந்தியர்கள் இருக்கிறார்கள்... இந்தியா வாழ்வதற்கு நன்றாக இருந்தால், ஏன் இங்கு வருகிறீர்கள்?" என சத்தமான குரலில் மீண்டும். மீண்டும் ஆபாச சொற்களை அந்த பெண்மணி பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, சத்தம் போட்டு நிறவெறி கருத்துகளை கத்தியபடியே, அந்த நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டார்.

  • This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.

    Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z

    — Reema Rasool (@reemarasool) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த வீடியோவை, முதல் முதலாக பதிவேற்றியவர் தனது பதிவில்,"எனது தாயார், அவர்களின் மூன்று நண்பர்களுடன் இரவு உணவருந்த சென்றபோது, டெக்ஸாசின் டல்லாஸ் நகரில் இந்த சம்பவம் நடந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை பதிவேற்றியவரின் தாயார், சண்டையிடும் அப்பெண்ணிடம் நிறவெறி ரீதியலான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து, இரு தரப்புக்கும் வாக்குவதாம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த மெக்ஸிகன் - அமெரிக்கன் பெண்மணி அவரின் தாயாரையும், பிற 3 பெண்களையும் தாக்கியுள்ளது தெரியவந்தது. நிறவெறி தாக்குதல் நடத்திய அந்த பெண் மீது, தாக்குதல் நடத்தியது, உடலில் காயம் ஏற்படுத்தியது மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் தற்போது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மிகுந்த அச்ச உணர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, ரீமா ரஸ்சூல் என்பவர் ட்விட்டரில்,"இது மிகவும் அச்சமூட்டுகிறது. அந்த பெண்ணிடம் துப்பாக்கி இருந்தது. அந்த இந்திய பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை சுட வேண்டும் என நினைக்கிறார். இது மிகவும் கேவலமானது. இந்த வெறுப்பு மிக்க குற்றத்தை புரிந்த அந்த பெண்மணி சட்ட ரீதியாக தண்டனைக்கு உள்ளாக வேண்டும்" என பதிவிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: குருவிக்கே கூண்டா... ட்விட்டர் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் புகார்... மகிழ்ச்சியில் மஸ்க்

Last Updated : Aug 26, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.