ETV Bharat / international

'தாலிபான் அல்கொய்தாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள்' - ஆப்கான் ராணுவத் தளபதி!

காபூல்: தாலிபான் பயங்கரவாதிகள் இன்னும் அல்கொய்தாவுடனான உறவுகளைத் துண்டிக்கவில்லை என ஆப்கான் ராணுவத் தளபதி யாசின் ஜியா தெரிவித்துள்ளார்.

tali
ali
author img

By

Published : Oct 27, 2020, 7:56 PM IST

ஆப்கான் சிறப்புப் படைப்பிரிவு நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்தத் தலைவராக அறியப்படும் அபு முஷின் அல் மஸ்ரி சமீபத்தில் கொல்லப்பட்டார். இவர் 1980களில் அல்-கொய்தாவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கினார் மற்றும் அல்-கொய்தா தலைவராக இருந்த அய்மான் அல்-ஜவாஹிரியின் நம்பகமான உதவியாளராக இருந்தார்.

இந்நிலையில், யாசின் ஜியா கூறுகையில், "தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் அல்கொய்தாவுடனான உறவுகளைத் துண்டிக்கவில்லை. பிராந்தியத்தில் உள்ள மற்ற பயங்கரவாத குழுக்களுடனும் தாலிபான் அமைப்புக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் ஹெல்மாண்டில் ஒன்றிணைந்து வேலை செய்வது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்

மேலும், ஆப்கான் பிரதமர் அஷ்ரப் கானி கூறுகையில், "ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது. நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இருப்பிடமாக மாற விடாது.

நமது சர்வதேச நட்பு நாடுகளுடனான எங்கள் கூட்டுப்பணி தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதே" என்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.