தைபே: வட மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிஷாங் நகரில் 7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது.
பயணிகள் ரயிலில் ஒன்று தடம் புரண்டது. இருப்பினும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. முன்னதாக, நேற்று மாலை அதே பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதைத்தொடர்ந்து இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து சிஷாங் போலீசார் தரப்பில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் யூலி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது.
ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார். அவரை பத்திரமாக மீட்டுள்ளோம். டோங்லி நிலையத்தில் ஒரு ரயில் தடம் புரண்டது. அதன்பின் சரி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தைவானுக்கு அருகிலுள்ள பல தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்து, பின் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நேபாளத்தில் நிலச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு...