டெல்லி: இந்திய - அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கூறியதாக பிரபல பன்னாட்டு ஊடகம் பகிர்ந்து உள்ள வீடியோவில், "ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 விண்கலத்திற்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். குட் லக். நாங்கள் உனக்கு (சந்திரயான் 3 விண்கலம்) உற்சாகத்தைக் கொடுக்கிறோம்" என தெரிவித்து உள்ளார்.
மேலும், துருவ கலவைகள் மற்றும் வரலாற்றுப் பதிவை நிலவு, விக்ரம் லேண்டர் உதவி உடன் கொடுக்க உள்ளது எனவும் சுனிதா வில்லியம்ஸ் கூறி உள்ளார். சுனிதா வில்லியம்ஸ், இரண்டு விண்கலங்களில் 322 நாட்களை விண்வெளியில் கழித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தானியங்கி லேண்டிங் வரிசையைத் தொடங்குவதற்கு அனைத்தும் (Automatic Landing Sequence) தயாராக உள்ளது. இன்று மாலை 5.44 மணியளவில் லேண்டர் தொகுதி (Lander Module), அதன் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வருகை தர காத்திருக்கிறது. தானியங்கி லேண்டிங் வரிசையிடம் இருந்து வரும் கட்டளையைத் தொடர்ந்து, லேண்டர் தொகுதி இன்ஜின்களை இயக்கும்.
இந்த செயல்திட்டக் குழு இதனைத் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொண்டே இருக்கும். இதன் நேரலை 5.20 மணிக்கு தொடங்க உள்ளது” என இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ‘X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: சந்திரயான்-3 திட்டத்தில் நாமக்கல் மண்ணின் பங்களிப்பு... புவியியல் நிபுணர் கூறிய சுவாரசிய தகவல்!
-
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV
">Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023

The… pic.twitter.com/x59DskcKUVChandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV
இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரை உலகமே உற்று நோக்கி வருகிறது. இதன் வேகம் 25 கிலோ மீட்டரில் இருந்து குறைக்கப்பட்டுக் கொண்டே வரும். முன்னதாக, கடந்த ஜூலை 14 அன்று எல்விஎம் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், பூமியைச் சுற்றி முடித்து கடந்த ஆகஸ்ட் 1 அன்று நிலவை நோக்கிச் சென்றது.
சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியின் மூலம் நிலவின் துருவத்தை அடைந்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா அடைய உள்ளது. முன்னதாக அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல், நிலவில் ஆராயப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திரயான் -3: நிலவின் மேற்பரப்பில் லேண்டர், ரோவரின் பணி என்ன?