தைபே நகரம்: தீவு நாடான தைவானில் இன்று (செப்-17) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும் அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் பொருட்கள் விழுந்ததாக செய்திகள் வெளியிட்டன. இந்த நிலநடுக்கத்தால் தைவானின் தெற்கே உள்ள காவோஷியுங் நகரில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சுமார் 8,500 பேர் வசிக்கும் டைடுங் கவுண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக மே மாதம் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கும் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தைவான் பிரச்னைக்கு மத்தியில் சீனா, தென்கொரியா உயர்மட்ட ஆலோசனை!