பாலஸ்தீனம்: காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று (நவ. 17) மாலை 6 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயானது மளமளவென பரவி அடுக்குமாடி கட்டடம் முழுவதும் பரவியது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
இந்த தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் தேக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் கடுமையான மின் பற்றாக்குறை உள்ளதால் பாலஸ்தீனியர்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அவர்கள் பெட்ரோல் தேக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபாநாயகர் பதவியில் இருந்து விலகுகிறார் நான்சி பெலோசி