ETV Bharat / international

மகாராணி 2ஆம் எலிசபெத்துக்காக மெக்காவில் யாத்திரை... ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது... - மெக்காவில் ராணி 2ஆம் எலிசபெத்

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று மெக்காவில் யாத்திரை மேற்கொண்ட ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat Saudi Arabia arrests man over pilgrimage for Queen Elizabeth

author img

By

Published : Sep 13, 2022, 7:14 PM IST

துபாய்: சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியின் முற்றத்தில் ஒருவர் ராணி 2ஆம் எலிசபெத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற பதாகையுடன் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விசாரணை நடத்திய சவுதி போலீசார் நேற்று (செப் 12) ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் மெக்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மெக்காவில் புனித பயணம் செய்பவர்கள் பதாகைகள் வைத்திருக்கவும், கோஷங்கள் எழுப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை ஏமான் நாட்டு நபர் மீறியதால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி 2ஆம் எலிசபெத் செப். 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மகன் சார்லஸ் மன்னராக பதவியேற்றுள்ளார். எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: மகாராணி 2ஆம் எலிசபெத்துக்கு செப்.19ஆம் தேதி இறுதி சடங்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.