பெய்ஜிங் (சீனா): விவோ (Vivo) மொபைல் ஃபோன் நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 5) அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிவர்தனை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகாலயா , மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், விவோ மீதான விசாரணையை இந்தியா, சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு நேர்மையாகவும், பாகுபாடு இன்றியும் நடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
விவோ இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீன நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறோம். இரு நாட்டு எல்லை பகுதிகளில் நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியவில் உள்ளள சீன நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை நடந்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்துக்கள் முடக்கம்!