லண்டன்: லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் நாளை முதல் 4 நாள்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அதோடு 2ஆம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகேயே, இவரது உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஆம் எலிசபெத் செப்.8ஆம் தேதி காலமானார். அவரது ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் கேஸ்ட்லே இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காலை அங்கிருந்து சாலை மார்க்கமாக எடின்பர்க்கில் உள்ள ஹோலி ரூட் ஹவுஸ் அரண்மனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அங்கு நாளை பிற்பகல் வரை வைக்கப்படும். அதன்பின் செயின்ட் கிலேஸ் கதீட்ரல் தேவாலயத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. இறுதியாக எடின்பர்க்கில் இருந்து தனி விமானம் மூல பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பீரங்கிகள் முழங்க ராஜாவாக பதவியேற்றார் மூன்றாம் சார்லஸ்..!