ETV Bharat / international

சிரியா போர்: ஃபிரான்ஸ், ஜெர்மனி தலைவர்களுடன் புடின் ஆலோசனை

மாஸ்கோ: சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரின் தற்போதைய நிலவரம் குறித்து ஃபிரான்ஸ், ஜெர்மனி தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

putin
author img

By

Published : May 22, 2019, 11:51 AM IST

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இப்போரின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உரையாடலின்போது, போர் நிறுத்த விதிகளை மீறி சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்டுவரும் தாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், வடமேற்கு சிரியாவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர துருக்கியுடனான ரஷ்யாவின் கூட்டு முயற்சி குறித்து விளாடிமிர் புடின் இருநாட்டுத் தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

மூன்று நாட்டுத் தலைவர்களின் இந்த உரையாடலில், உக்ரைன் நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி குறித்தும், தற்போது நிகழ்ந்துள்ளது ஆட்சி மாற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஹமா மாகணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், ரஷ்யா ஆதரவு பெற்ற சிரியா ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில், 40 சிரிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட, சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தத் தொலைபேசி உரையாடலானது நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கி இதுவரை மூன்று லட்சத்து 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.