கொழும்பு : தீவு நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் ரொட்டித் துண்டுக்கு அல்லல் படும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிபொருள் நிரப்ப பல கிலோ மீட்டர் தூரம் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், ஸ்னைப்சாட், டிக்டாக் என அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கு 13 மணி நேரம் முதல் 18 மணி வரை மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர். மறுபுறம், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதன் காரணமாக, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் அதிபரிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவரது ராஜினாமாவை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலில் மற்றொருவர் பிரதமர் பதவியை ஏற்கவும் துணியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கு மத்தியில் மகிந்த ராஜபக்சே பதவி விலகல் கடிதம் குறித்து ஆலோசனை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராஜினாமா கடிதத்தை நீட்டிய மகிந்தா ராஜபக்சே!