பாலி: இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகிய நாடுகளில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
With G-20 leaders at the Mangrove Forest in Bali. @g20org pic.twitter.com/D5L5A1B72e
— Narendra Modi (@narendramodi) November 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With G-20 leaders at the Mangrove Forest in Bali. @g20org pic.twitter.com/D5L5A1B72e
— Narendra Modi (@narendramodi) November 16, 2022With G-20 leaders at the Mangrove Forest in Bali. @g20org pic.twitter.com/D5L5A1B72e
— Narendra Modi (@narendramodi) November 16, 2022
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் 'டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு இன்று (நவம்பர் 16) பயணம் செய்தார். அப்போது அங்கு மரங்களை நடவு செய்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மாங்குரோவ் காடுகள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்தது.
இந்தியாவில் 5,000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளன. காற்றில் உள்ள கார்பனை விரைவாக உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐநா பருவ நிலை மாநாட்டில் இந்தியாவின் தேசிய அறிக்கை வெளியீடு