ETV Bharat / international

Imran Khan : இம்ரான் கான் விடுதலை... முறைகேடு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு! - இம்ரான் கான்

Imran Khan Toshakhana corruption case : தோஷகன்னா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.

Imran Khan
Imran Khan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 2:29 PM IST

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தோஷகன்னா முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் இம்ரான் கானுக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு பயணங்கள், உலக நாடுகள் தலைவர்களுடனான சந்திப்பு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு தெரிவித்தது.

அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப் பொருட்களை பேணிக் காக்கும் பணியை தோஷகன்னா துறை மேற்கொண்டு வந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத்தை தளமாக கொண்ட மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானை குற்றவாளி என அறிவித்தது.

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தோஷகன்னா முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இதனால் விரைவில் இம்ரான் கான் விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. மேலும், அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : KL Rahul : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுல் விலகலா? - ராகுல் டிராவிட் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.