நைஜீரியா: மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் நேற்று (ஜூன் 5) பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தபோது, புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதோடு கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதனால் குழந்தைகள், பெண்கள் என 22 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 70 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் மருத்துவமனையில் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த வகையில் உயிரிழப்பு எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் காங்கோவில் நடந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகம் முழுவதும் 780 பேருக்கு குரங்கு அம்மை... பாலியல் சுகாதாரமின்மை காரணமா..?