ஆஸ்லோ: உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசு, பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் (Memorial) மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பார் சிவில் லிபர்டீஸ் ( Center for Civil Liberties.) ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, 1980ஆம் ஆண்டு முதல் தனது நாட்டின் ஜனநாயகத்துக்காகவும், அமைதியின் வளர்ச்சிக்காவும் முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 1996ஆம் ஆண்டில் வியாஸ்னா என்ற அமைப்பை நிறுவி, மக்கள் போராட்டங்களுக்காக சிறை சென்றவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதவரவு அளித்துவருகிறார்.
அவரது சேவையை பாராட்டி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சென்டர் பார் சிவில் லிபர்டீஸ் இரண்டும் அந்தந்த நாட்டு மக்களின் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதியான சகவாழ்வின் மேம்பாட்டுக்காக அர்பணிப்புடன் செயல்பட்டுவருவதால் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!