அமெரிக்கா(கேப் கனாவெரல்): நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா(NASA), முதற்கட்டமாக ஆர்டெமிஸ் (Artemis 1, launch Orion) என்ற திட்டத்தில் 'ஓரியன்' என்ற ஆளில்லா விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் நிலவுக்கு அனுப்ப திட்டமிருந்தது. இதனிடையே, ஆர்மிடெஸ்-1 என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை அனுப்ப இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு, சூறாவளி உள்ளிட்ட காரணங்களில் 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் கடந்த நவ.16-ல் ஓரியன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ராக்கெட் மூலம் நிலவை நோக்கி ஏவப்பட்டது. தொடர்ந்து பின்னர், ராக்கெட்டிலிருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணம் மேற்கொண்டதோடு, சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவிலிருந்த படி, பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 280,000 மைல்கள் (380,000 கி.மீ.) தூரத்தைக் கடந்து பயணித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் 27,000 மைல்களை (432,000 கி.மீ.) வரை கடந்து செல்ல உள்ளது. இதுவரையில், நிலவுக்கு மனிதனை அனுப்பவதற்கான இத்திட்டத்தில் இந்த ஒரு ஆளில்லா விண்கலம் இவ்வளவு தூரத்தைக் கடந்தது இதுவே முதன்முறையாகும்.
இதுகுறித்து கூறிய ஓரியன் திட்டத்தின் மேலாளர் ஜிம் கெஃப்ரே, திட்டமிட்ட படி நிலவை நோக்கி அதிக தூரம் செல்வது, பின் நிலவில் நீண்ட காலம் தங்க வைப்பது உள்ளிட சவால்கள் இதில் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இப்பயணித்தின்போது, திடீரென ஓரியன் விண்கலத்துடனான தொடர்பில் ஏற்பட்ட சிறு பிரச்சனை சில மணிநேரத்திற்குள் சரி செய்யப்பட்டதாக நாசா அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாசாவின் கூற்றுப்படி, நிலவிற்கு செல்ல உள்ள விண்வெளி வீரர்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவைகளுக்கான ஒத்திகை வருகிற 2024-ல் பார்க்கப்பட்டு, பின்னர் 2025-க்குள் நிலவுக்கு அனுப்புவதற்கானப் பணிகள் செயல்படுத்தப்படும். முன்னதாக, 50 ஆண்டுகளுக்கு முன் 1969-ல் நாசாவின் அப்போலோ 17 திட்டத்தில் இறுதியாக நிலவுக்கு மனிதர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறை கண்காணிப்பாளரை சந்தித்த அமைச்சர் ஜெயின்.. வெளியான அதிர்ச்சி வீடியோ