மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் 17ஆவது அதிபராக ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் ஜூலை 30ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக 5) ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார். அதோடு, இரு நாட்டின் ஒத்துழைப்புகள் குறித்தும் விரிவாக பேசினார்.
இந்தோ - பசிபிக் தொலைநோக்கு கொள்கையில் பிலிப்பைன்ஸ் முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தார். குறிப்பாக பிலிப்பைன்ஸின் வளர்ச்சிக்காக அந்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு இந்தியா முழு உடனிருக்கும் என்று உறுதியளித்தார்.
ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17ஆவது அதிபராவார். அந்நாட்டு மக்கள் இவரை போங்பாங் என்று அழைக்கின்றனர். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்த ஃபெர்டினாண்ட் மார்கோஸின் மகனாவார். 1949ஆம் ஆண்டிலிருந்து இந்தியா-பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஐஎன்எஸ் சுமேதா இந்தோனேஷியாவுக்கு பயணம்