சான்ஃபிரான்சிஸ்கோ: அண்மைக் காலங்களில் சாட்பாட் (chatbot)வசதி பல்வேறு இணையதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வர்த்தக இணையதளங்களில் இந்த அம்சம் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களையும் விற்பனையாளரையும் இணைக்க இந்த சாட்பாட் பயன்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தகவல் பறிமாற்றத்திற்கான முகவர் போல இது செயல்படுகிறது.
வாடிக்கையாளர் கேட்கும் சந்தேகம் அல்லது தகவலுக்கு, விற்பனையாளருக்கு பதில் சாட்பாட் பதில் கூறும். பெரும்பாலும் வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தி வந்த இந்த வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டாவிலும் (முகநூல்) அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மெட்டாவின் சாட்பாட், பிளெண்டர்பாட் 3 (BlenderBot 3) என்ற பெயரில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எழுத்து மற்றும் குரல் வாயிலாக தொடர்பு கொள்ளும் இந்த சாட் பாட்டின் முக்கிய அப்டேட் என்னவென்றால், இதனை மெட்டாவில் மட்டுமல்லாமல் தனியாக இணையத்தில் லாகின் செய்தும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.