ETV Bharat / international

FIFA World cup: 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினா வெற்றி; கொண்டாடும் ரசிகர்கள் - கால்பந்து போட்டி

ஃபிஃபா உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.

36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினா வெற்றி

author img

By

Published : Dec 19, 2022, 7:12 AM IST

லுசைல்: ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு சாம்பியன் அணிகளான பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா தகுதி பெற்றன. லுசைல் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 18) நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கம் முதலே அர்ஜென்டினா வீரர்கள் அதிரடியாக விளையாடி வந்தனர். ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அதன்பின் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பிரான்ஸ் வீரர் கைலியென் எம்பாபே முதல் கோல் அடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 81ஆவது நிமிடத்தில் கைலியென் எம்பாபே மீண்டும் ஒரு கோல் அடித்து கோல் கணக்கை 2-2 என்று சமன் படுத்தினார். இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதனால் கூடுதலாக நேரம் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி மீண்டும் அடித்த கோலால் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது.

வெற்றிக்கான கோலாக இது அமைக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பிரான்ஸ் அணியின் எம்பாபே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் உலகக்கோப்பை இறுதி ஆட்த்தில் ‘ஹாட்-ரிக்’ கோல் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார்.

‘ஹாட்-ரிக்’ கோல் அடித்த கைலியென் எம்பாபே

பின்னர் கூடுதல் நேரத்திலும் ஆட்டம் 3-3 என சமன் ஆனதால் ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. அதில் இரண்டு அணிகளுக்கு 4 வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டன. அதில் அர்ஜென்டினா அணி வாய்ப்பை பயன்படுத்தி 4 கோல் அடித்தது. ஆனால், பிரான்ஸ் அணி 2 கோல் மட்டுமே அடித்ததால், ஷூட்-அவுட் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

ஃபிஃபா உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

முன்னதாக 2 முறை உலக கோப்பை சாமியனான அர்ஜென்டினா 1986ஆம் அண்டிற்கு பின் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வீரர்களும் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 344 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: U-19 World Cup: அமெரிக்க அணியா..? இந்திய பி டீமா..? குழம்பிப்போன ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.