ஷார்ம் எல் ஷேக்: ஐநா பருவநிலை மாநாடு (UNFCCC - COP 27) எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகித்துவருகிறார். இன்று (நவம்பர் 8) சதுப்புநில பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கிவைத்தார். அதன்பின் சதுப்புநிலக்காடுகள் குறித்து விளக்கினார். அப்போது அவர், "சதுப்புநிலங்களின் உலகளாவிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைந்துள்ளன. சதுப்புநிலங்கள் உலகின் மிக முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த காடுகள் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு நாற்றங்கால் நிலமாக செயல்படுகிறது. கடலோர அரிப்பைப் பாதுகாக்கிறது. அதிகளவில் கார்பனைப் பிரித்தெடுக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
-
Addressed the Mangrove Alliance for Climate Launch on the sidelines of COP27.
— Bhupender Yadav (@byadavbjp) November 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Stated that to sustain the blue economy, it is imperative to ensure sustainability of coastal habitats, particularly mangroves for tropical nations, at the local, regional, and international levels. pic.twitter.com/oF4aU7dsPZ
">Addressed the Mangrove Alliance for Climate Launch on the sidelines of COP27.
— Bhupender Yadav (@byadavbjp) November 8, 2022
Stated that to sustain the blue economy, it is imperative to ensure sustainability of coastal habitats, particularly mangroves for tropical nations, at the local, regional, and international levels. pic.twitter.com/oF4aU7dsPZAddressed the Mangrove Alliance for Climate Launch on the sidelines of COP27.
— Bhupender Yadav (@byadavbjp) November 8, 2022
Stated that to sustain the blue economy, it is imperative to ensure sustainability of coastal habitats, particularly mangroves for tropical nations, at the local, regional, and international levels. pic.twitter.com/oF4aU7dsPZ
சதுப்புநிலங்கள் உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளிலும், 123 நாடுகளிலும் காணப்படுகின்றன. சதுப்புநிலங்கள் பல வெப்பமண்டல கடலோரப் பகுதிகளின் பொருளாதார அடித்தளமாகும். நீலப் பொருளாதாரத்தைத் தக்கவைக்க, கடலோர வாழ்விடங்கள், குறிப்பாக வெப்பமண்டல நாடுகளுக்கான சதுப்புநிலங்கள், உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். எதிர்கால கடல் மட்ட உயர்வு, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை பேரழிவுகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த சதுப்பு நிலங்கள் முக்கியமான மற்றும் சிறந்த வழியாகும். வரும் 2030ஆம் ஆண்டிற்குள் கூடுதலான காடுகள் மற்றும் மரங்கள் மூலம் 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் கரியமில வாயுக்களை நீக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
நிலப்பரப்பு வெப்பமண்டல காடுகளை விட சதுப்புநில காடுகள் 4 முதல் 5 மடங்கு அதிக கார்பன் உமிழ்வை உறிஞ்சும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. என்டிசி (Nationally Determined Contribution) இலக்குகளை அடைய சதுப்புநில காடுகள் நாடுகளுக்கு பெரும் பங்காற்றும். இந்தியா சதுப்புநிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதில் வலுவான அர்ப்பணிப்புகளைக் கொண்டுள்ளது. உலகில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களின் மிகப் பெரிய பகுதிகளில் ஒன்றான சுந்தரவனக் காடு, நிலப்பரப்பு மற்றும் கடல் சூழல்களில் விதிவிலக்கான பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தாவரங்கள் மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்தியாவில் அந்தமான் பகுதியில் சதுப்புநிலப் பரப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐநா பருவ நிலை மாநாடு: இந்திய குழுவுக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை