ETV Bharat / international

குஜராத்தில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாகப் புகார் எழுந்த மசூதி - இடிக்க முயற்சி.. வெடித்த வன்முறை.. ஒருவர் கொலை! - போராட்டம்

உள்ளாட்சி அமைப்பால் சட்டவிரோதக் கட்டடம் என அறிவிக்கப்பட்ட மதக் கட்டமைப்பை இடிப்பதை எதிர்த்து, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்.

குஜராத்தில் மதக் கட்டமைப்பு இடிப்பதை எதிர்த்து போராட்டம்

author img

By

Published : Jun 18, 2023, 7:49 AM IST

குஜராத்: குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் நகரில் மஜேவாடி கேட் என்ற பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில் அந்த கட்டடத்தை அகற்றப்போவதாக அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அந்த நோட்டீஸில், 5 நாட்களுக்குள் மசூதி கட்டுமானம் தொடர்பான ஆவணங்கள் அனுப்ப வேண்டும் எனவும்; இல்லையெனில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி அங்கிருந்து இடித்து அகற்றப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 5 நாட்கள் கடந்தும் பள்ளிவாசலில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால், உறுதியளித்தபடி மாநகராட்சி நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவு அந்த மசூதி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் சுமார் 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் கூடியது.

இதையும் படிங்க:Manipur Violence: பாஜக எம்பி ராஜ்குமார் ரஞ்சன் வீட்டிற்கு தீ வைப்பு!

இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். போலீசார் அந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தனர். இருந்த போதிலும், கூட்டம் அப்படியே நின்றது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்த மர்மநபர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

பின் போராட்டம் கலவரமாக வெடித்தது. கும்பல் கட்டுக்கடங்காமல் மாறியதன் காரணமாக நிலைமை தீவிரமடைந்தது. அது மட்டுமின்றி சிலர் அப்பகுதியில் நாசவேலையில் ஈடுபட்டதுடன், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்ததாக கூறப்படுகிரது. இந்த சம்பவத்தில் சிக்கி கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காவலர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும், இந்த கலவரத்தின் போது பலர் காவல்துறையின் வாகனங்களையும், பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 174 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பழங்குடி சிறுவனை காதலித்த சிறுமி ஆணவக்கொலை.. கர்நாடகாவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.