ஜெருசலேம்: இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு இஸ்ரேலில் 36 வயது நபர் , மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித இணை நோய்களும் இல்லாத அந்த நபர், நெக்லேரியா ஃபுளோரி (Naegleria fowleri) என்ற மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்படும், நெக்லேரியாசிஸ் (naegleriasis)நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இந்த நெக்லேரியா ஃபுளோரி என்ற அமீபா வகை, ஏரி, குளம் உள்ளிட்ட நன்னீர் ஆதாரங்களில் உற்பத்தியாகிறது என்றும், நாசி வழியாக நுழையும் நோய்த்தொற்று நேரடியாக மூளையை பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளும், தொற்று மோசமடைந்தால் கழுத்துப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொள்ளை சம்பவத்தைத்தடுத்து உரிமையாளர் உயிரைக்காப்பாற்றிய 'நன்றியுள்ள' பூனைக்குட்டி!