ETV Bharat / international

ஹிஜாப் போராட்டங்களில் கைதான இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் - கொந்தளிக்கும் மக்கள் - ஈரானில் இருவருக்கு தூக்கு நிறைவேற்றம்

ஈரானில் ஹிஜாப் சட்ட போராட்டங்களில் கைதான மேலும் இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

Iran
Iran
author img

By

Published : Jan 8, 2023, 1:29 PM IST

ஈரான்: ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, சிறப்பு காவல் படையும் அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம், தெஹ்ரானில் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை எனக் கூறி போலீசார் கைது செய்த மாஷா அமினி(22) என்ற இளம்பெண் போலீசார் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனால், ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். கட்டாய ஹிஜாப் சட்டத்தை கண்டித்தும், ஈரான் அரசைக் கண்டித்தும் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபலங்கள் பலர், தங்களது முடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரான் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதும், கைது நடவடிக்கை மேற்கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது துணை ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கில் முகமது கராமி, சையத் முகமது ஹொசைனி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான முகமது கராமி, முகமது ஹொசைனி இருவருக்கும் நேற்று(ஐன.7) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று இருவரும் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஈரானில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. பல இடங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாஷா அமினியின் மரணத்திற்குப் பிறகு சுமார் 16 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஹிஜாப் சட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 19,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், 517 பேர் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் போராட்டங்களில் ஏற்பட்ட இறப்புகள் தொடர்பாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: சீனாவில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 17 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.