ப்ராக் : செக் குடியரசு தலைநகர் ப்ரக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழகத்தில் இருந்த 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 25 பேர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர்.
சார்லஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். என்ன காரணத்திற்காக அந்த மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரிய வராத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
முதற்கட்டமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்த போலீசார், பின்னர் 14 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரின் பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில், மாணவர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அதேநேரம் இந்த தாக்குதல் பயங்கரவாத கும்பலில் சதி இல்லை என செக் குடியரசு உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாக, தனது தந்தையையும் கொலை செய்த மாணவர், பின்னர் பல்கலைக்கழகத்தில் நுழைந்து கண்மூடித்தன தாக்குதல் நடத்திவிட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நாள் துக்க தினமாக செக் குடியரசு அரசு அறிவித்து உள்ளது. அந்நாட்டின் அரசு அலுவலகங்கள், முக்கிய இடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் ஆப்பிள் பொருட்களுக்கு தடை? காப்புரிமை சிக்கலில் சிக்கியதா ஆப்பிள்? அதிர்ச்சி தகவல்!