ETV Bharat / international

ஆன்லைன் செய்தி சட்டம் எதிரொலி - கனடாவில் உள்ள செய்தி இணைப்புகளை நீக்க கூகுள் திட்டம் - நீக்கம்

கனடா ஊடகங்களுக்கு, செய்திகளுக்காக தொழில்நுட்ப ஜாம்பவான்கள், பணம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கனடா நாட்டில் கனடா செய்திகளின் இணைப்புகளை நீக்குவதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

google-set-to-remove-news-links-in-canada-over-online-news-law
ஆன்லைன் செய்தி சட்டம் எதிரொலி - கனடாவில் உள்ள செய்தி இணைப்புகளை நீக்க கூகுள் திட்டம்
author img

By

Published : Jun 30, 2023, 12:35 PM IST

ஒட்டாவா, ஒன்டாரியோ: கூகுள் நிறுவனம், நேற்று (ஜூன் 29) கனடா நாடு முழுவதிலும் உள்ள தங்களது தளங்களில் இருக்கும் கனடா நாட்டு செய்திகளுக்கான இணைப்புகளை நீக்குவதாக தெரிவித்து உள்ளது. இது டிஜிட்டல் வல்லுநர்கள், ஊடகங்களுக்கு தாங்கள் பகிரும் அல்லது மறுபரிசீலனை செய்யும் உள்ளடக்கத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோக்கில், புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளதால், கனடா நாட்டு செய்தி இணைப்புகளை, கூகுள் நிறுவனம் செய்திகளில் இருந்து நீக்க உள்ளது.

உள்ளூர் செய்திகளை முன்னிலைப்படுத்தும் இணையம் அல்லது செயலிகள் மூலம் கிடைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட திரட்டி சேவை - மற்றும் மொபைல் போன்களில் உள்ள அம்சமான கூகுள் டிஸ்கவர் ஆகியவற்றிலிருந்து உள்ளடக்கத்தைக் கண்டறிய மக்களுக்கு உதவும் அம்சமும் நீக்கப்படுவதாக கூகுள் தெரிவித்து உள்ளது.

கூகுள் நிறுவனம், அதன் விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்கும், பில்லியன் டாலர்களில் ஒரு சிறிய பங்கை செலுத்துவதற்குப் பதிலாக, கனடா மக்கள் செய்திகளை தெரிந்து கொள்ள தடை விதிக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, கனடா நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிகுயிஜ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் நிறுவனம், கனடா மக்களை கொடுமைப்படுத்த முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம், தனது முடிவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசிடம் தெரிவித்து உள்ளது. அது எப்போது செய்திகளை அகற்றத் தொடங்கும் என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த புதுச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரத்தில், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்தின் எதிரொலியாக, கனடா நாட்டு செய்திகள் மட்டுமே நீக்கப்பட உள்ளன. எனவே கனடா மக்கள், மற்ற பிரபல செய்தி இணையதளங்களில் இருந்து தங்கள் நாடுகளைச் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

மெட்டா நிறுவனம், கடந்த வாரம் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, அதன் சமூக ஊடக தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து செய்திகளை நீக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது. உள்ளூர் வெளியீட்டாளர்களுடன் மேற்கொண்டு உள்ள ஒப்பந்தங்களும், இதன் மூலம் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டு உள்ளது.

மெட்டா நிறுவனம், ஏற்கனவே தனது கனடா பயனர்களில் 5 சதவீதம் வரையிலான செய்திகளை நிறுத்துவதற்கான சோதனையை நடத்தி உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் இதே போன்ற சோதனையை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் கென்ட் வாக்கர், கூகுள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ள வலைப்பதிவில் தெரிவித்து உள்ளதாவது, இந்த சட்டம் “செயல்பட முடியாத சட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கனாடா வெளியீட்டாளர்களிடமிருந்து வரும் செய்திகளை கனடா மக்கள் அணுகுவதற்கு வரையறுக்கப்படாத நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். "எங்களால்,இதன் தாக்கங்களை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது வாக்கர் குறிப்பிட்டு உள்ளார். ஆன்லைன் செய்திச் சட்டத்தின்படி, கூகுள் மற்றும் மெட்டா ஆகிய இரண்டும் செய்தி வெளியீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களின் தளத்தில் தோன்றும் செய்தி உள்ளடக்கம் பணம் ஈட்ட உதவும் வகையில், இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மெட்டா மற்றும் கூகுள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் விளம்பரங்களை சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்தி, சிறிய பாரம்பரிய போட்டியாளர்களை மறைத்ததாக கடந்த காலத்தில் மரபு ஊடகங்களும் ஒளிபரப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் நீக்கப்படுவதை தடுக்க இரு நிறுவனங்களுடனும், கனடா அரசு நேர்மறையான தீர்மானத்திற்கு வர முடியும் என்று கனடா நாட்டின் பாரம்பரியத் துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிகுயிஜ், நம்பிக்கை தெரிவித்து இருந்தார். கூகுள் மற்றும் மெட்டா செய்திகளை அவற்றின் தளங்களில் இருந்து நீக்குவதை நிறுத்தினால் செய்தி அறைகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், ஆனால் அது எவ்வாறு செய்யப்படும் என்பதை தற்போதைய நிலையில் சரியாகக் கூற இயலாது. 2008ஆம் ஆண்டு முதல், கனடா முழுவதும் கிட்டத்தட்ட 500 செய்தி அறைகள் மூடப்பட்டுள்ளதாக ரோட்ரிக்ஸ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Etv Bharat Exclusive: வனம் தின்னும் பிளாஸ்டிக்.. குப்பை மேட்டில் மேயும் வனஉயிர்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.