ETV Bharat / international

ஊழல் வழக்கில் சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு மரண தண்டனை - Legal Affairs of the National Committee

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் உட்பட மூன்றுபேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatசீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சருக்கு மரண தண்டனை

author img

By

Published : Sep 22, 2022, 10:51 PM IST

பீஜிங்: சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் உட்பட இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்த குற்றத்திற்காகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அதிபர் ஸி ஜின் பிங்கிற்கு எதிராக பிரசாரம் செய்ததற்காகவும் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஃபூ ஸெங்குவாவிற்கும், சீனாவின் காவல்துறை அலுவலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சுமார் 17.3 மில்லியன் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எழுந்த புகார் வழக்கில், இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு சில மணி நேரங்களில் ஜியாங்சு அலுவலரான வாங்கிற்கும் இதே தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. லஞ்சம், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது, போலி அடையாளங்களை உருவாக்கியது போன்ற குற்றத்திற்காக வாங்-ற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை விதிக்கப்பட்ட வாங், ஜியாங்சு மாவட்ட சிபிசி கட்சியின் செயலாளராவார். முன்னாள் அமைச்சர் ஃபூவிற்கு இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். சீன அதிபரின் ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் சீன அலுவலர்களுக்கு பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பல ராணுவ அலுவலர்களும் தண்டிக்கப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஃபூ ஒரு காலத்தில் சீனாவின் எழுச்சி நாயகனாகப் பார்க்கப்பட்டவர். இவர், 2015இல் ஸொயு எனும் முதன்மை அரசியல்வாதிக்கு ஆயுள் தண்டனைப் பெற்றுத் தந்தார். ஃபூ தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அதில் லாபம் சம்பாதிப்பதாக மறுபக்கம் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஃபூ 2005 முதல் 2021 ஆகிய அவரின் பதவி காலகட்டத்தில் லஞ்ச செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபணமானது. மேலும், கடந்த 2014 முதல் 2015 காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தேடப்படும், தனது இளைய சகோதரரை விசாரணைகளில் இருந்து தப்பிக்க கேடயமாக இருந்ததும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர் ஃபூ தனது பதவிகாலங்களில் சுமார் 117 மில்லியன் யுவான் பணத்தொகையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றதும் நீதிமன்றத்தில் நிரூபணமானதையடுத்து இந்த தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸி ஜின் பிங் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் பல சீன ராணுவ அலுவலர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆடை குறியீட்டை மீறியபெண் உயிரிழந்த விவகாரம்... வெடித்த வன்முறை... 9 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.