ETV Bharat / international

Emmerson Mnangagwa: ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எமர்சன் நங்காக்வா மீண்டும் தேர்வு!

ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக எமர்சன் நங்காக்வா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Emmerson Mnangagwa
ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எமர்சன் நங்காக்வா மீண்டும் தேர்வு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 2:02 PM IST

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில், அதிபர் எமர்சன் நங்காக்வா தலைமையிலான ZANU-PF அரசு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த போதிலும், இரண்டாவது முறையாக, அதிபர் பதவிக்கு எமர்சன் நங்காக்வா, இரண்டாவது முறையாக, மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

1980ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே நாட்டில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) நடைபெற்ற பொதுத் தேர்தலில், நெல்சன் ஷமிசாவை தோற்கடித்து, இரண்டாவது மற்றும் இறுதி முறையாக, அதிபர் பதவிக்கு, எமர்சன் நங்காக்வா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

16 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பதவி வகித்து வந்த ராபர்ட் முகாபேயின் அரசை, 2017ஆம் ஆண்டில், ராணுவ புரட்சியின் மூலம் எமர்சன் நங்காக்வா கைப்பற்றினார். இதன்மூலம், ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்து வந்த ஏதேச்சதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

நாட்டின் அதிபராக எமர்சன் நங்காக்வா ஆட்சியிலும், மக்கள் சொல்லணாத் துயரங்களையே தொடர்ந்து அனுபவித்து வந்தனர். அரசின் திறன் அற்ற நிர்வாகம், வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதீத அளவு அதிகரிப்பு, சரியான சுகாதார கட்டமைப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர்.

பொருளாதார சிக்கலில் சிக்கி திளைத்த ஜிம்பாப்வே நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு,மேற்கத்திய நாடுகள் கடன் உதவிகளை அளித்தன. அந்த நிதியையும், மக்களின் நலனுக்காக செலவு செய்யாத நிலையில், ஜிம்பாப்வே நாட்டின் கடன் தற்போது 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல், ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குப்பதிவின் போது, அந்நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்க காலம் தாழ்த்தியதாகவும், இதன்காரணமாக, வாக்காளர்கள் 10 மணிநேரங்களுக்கும் மேலாக, வாக்குச்சாவடிகளில் காத்துக் கிடந்தனர். இதனிடையே, தேர்தல் வாக்குப்பதிவு நாளில், நாட்டின் முன்னணி தேர்தல் பார்வையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அதிபர் எமர்சன் நங்காக்வா தலைமையிலான ZANU-PF கட்சி, ஆட்சியை தக்கவைத்து உள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தன்னிச்சையான பார்வையாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டேங்கர் லாரி - ரோல்ஸ் ராய்ஸ் கார் மோதி கோர விபத்து... தனியார் குழும இயக்குனர் உள்பட 3 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.