ETV Bharat / international

ட்விட்டர் பழசு... கோகோ கோலா புதுசு! எலான் மஸ்க்கின் நெக்ஸ்ட் பிளான்..! - கோகோ கோலாவை வாங்க போகிறேன்

ட்விட்டரை வாங்கி உலகம் முழுவதும் ட்ரெண்டான எலான் மஸ்க் அடுத்ததாக ட்விட்டரை சுதந்திர கருத்துகளைத் தெரிவிக்கும் தளமாக மாற்ற இருப்பதாகவும், மேலும் கோகோ கோலாவை வாங்கப் போவதாகவும் அதிரடி கிளப்பியுள்ளார்.

கோகோ கோலாவை வாங்க போகிறேன்!- எலன் மாஸ்க்கின் எகிறும் லிஸ்ட்டுகள்

author img

By

Published : Apr 28, 2022, 4:31 PM IST

Updated : Apr 28, 2022, 5:25 PM IST

வாஷிங்டன்: எலான் மஸ்க் சென்ற திங்கள் (ஏப்ரல் 25) அன்று ட்விட்டரை அதன் CEO பராக் அகர்வால் இடமிருந்து 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இது உலக அளவில் பெரும் பேசுபொருளானது. மேலும் ட்விட்டரை அதன் பங்குதாரர்களின் அழுத்தத்தால் விற்பதாக பராக் அகர்வால் தெரிவித்து இருந்தார். ட்விட்டர் தளம், உலகில் உள்ள அனைத்து மூலை முடுக்குகளிலும் உள்ளவர்களுக்கு உடனடி தகவல் மற்றும் செய்திகளை வழங்கும் தளமாகும்.

ட்விட்டர் தளத்தை எலான் வாங்கியதற்கு பல தரப்பினரும் பல கருத்துகளைத்தெரிவித்து வந்த நிலையில் ட்விட்டர் புதிய வசதிகளும், சுதந்திரமாக கருத்துகளைப் பகிரும்படியான தளமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில், ‘ ட்விட்டர் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் தளமாகவும், மேலும் அரசியலில் நடுநிலையானதாகவும் இருக்க வேண்டும். வலது மற்றும் இடதுசாரி அரசியல் கருத்துகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கோகோ கோலாவையும் வாங்கலாம்: தொடர்ந்து ட்விட்டரில் ஃபன்(Fun) செய்து வரும் எலான் தற்போது கோகோ கோலாவையும் வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் அதிக செல்வ வளம், அனைத்தையும் வாங்கி விடலாம் என்ற எண்ணம் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறார், எலான் மஸ்க். மேலும் எலனின் இந்தப் போக்கை சில பிரபலங்கள் விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • For Twitter to deserve public trust, it must be politically neutral, which effectively means upsetting the far right and the far left equally

    — Elon Musk (@elonmusk) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Next I’m buying Coca-Cola to put the cocaine back in

    — Elon Musk (@elonmusk) April 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:சொன்னதை செய்த எலான் மஸ்க்... ரூ.3.36 லட்சம் கோடிக்கு முடிந்த ட்விட்டர் டீல்...

Last Updated : Apr 28, 2022, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.