ETV Bharat / international

சொன்னதை செய்த எலான் மஸ்க்... ரூ.3.36 லட்சம் கோடிக்கு முடிந்த ட்விட்டர் டீல்... - எலான் மஸ்க் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.36 லட்சம் கோடிக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த வகையில், ட்விட்டர் நிறுவனம் பங்குசந்தையிலிருந்து தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.

elon-musk-buys-twitter-for-$44b-and-will-take-it-private

author img

By

Published : Apr 26, 2022, 10:04 AM IST

சான் பிரான்சிஸ்கோ: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 63 கோடியே 74 லட்சம் ரூபாயாகும். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 விழுக்காடு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், 100 விழுக்காடு பங்குகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

அந்த வகையில், ட்விட்டர் நிறுவனம் பங்குசந்தையிலிருந்து தனிநபர் நிறுவனமாக மாறுகிறது. இந்த ஒப்பந்தம் நேற்று (ஏப். 25) அந்நிறுவனத்தின் 11 பேர் கொண்ட குழு எலான் மஸ்கிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் போடப்பட்டுள்ளது. 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடைய மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லாவை தொடர்ந்து, சமூக வலைதளம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்க், ட்விட்டரில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியவில்லை என்றும், தனது கைவசம் ட்விட்டர் வந்தால் முழு கருத்துசுதந்திரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 230 கோடிக்கும் அதிகமானோர் ட்விட்டர் கணக்கு வைத்துள்ளனர். ஒருபக்கம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதற்கு ஆதரவு பெருகிவருகிறது.

மறுப்புறம், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான் மஸ்க், அதனை கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்கொள்கிறார். இதுபோன்ற கருத்துக்கள் இனி சகஜமாக உலாவரும், சர்ச்சையை கிளப்பும் என்று அதிருப்தியும் கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: டீல் ஓகே... எலான் மஸ்க் கையில் ட்விட்டர்... பயனர்கள் குஷி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.