நியூயார்க்: ஃபிஜி தீவின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், லேசான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவுக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் பனை மர கடற்கரைகளுக்கும், பவளப்பாறைகளுக்கும் புகழ் பெற்றது. அதன் முக்கிய தீவுகளான விடி லெவு மற்றும் வனுவா லெவு, பெரும்பாலான மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
இந்த தீவுகளின் பெரும்பாலான பகுதிகள் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது.
இதையும் படிங்க:இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்