கரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட, உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதால் லேசான தொற்று பாதிப்பே உள்ளது. சிறந்த மருத்துவ பராமரிப்பை பெற்று நலமாக உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்" எலான் மஸ்க் பகீர் ட்வீட்