ETV Bharat / international

தைவானுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா - சீனாவின் நிலைப்பாடு என்ன? - சீனா

தைவான் நாட்டிற்கு, அமெரிக்கா ராணுவம் போன்ற எத்த்கைய உதவிகளை செய்ய முன்வந்தாலும், தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் உறுதியான நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று சீனா தெரிவித்து உள்ளது.

தைவான் நாட்டிற்கு ராணுவ உதவி செய்யும் அமெரிக்கா - சீனாவின் நிலைப்பாடு என்ன?

author img

By

Published : Jul 30, 2023, 3:07 PM IST

தைபே: தைவானுக்கு 345 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்து உள்ள நிலையில், தைவானை வெடிமருந்துக் கிடங்காக அமெரிக்கா மாற்றி உள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. சீனா, தைவான் நாட்டை உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ உதவி அளிக்க முன்வந்து உள்ளதை கண்டித்து, சீனாவின் தைவான் விவகார அலுவலகம், ஜூலை 29ஆம் தேதி, அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் பின்ஹுவா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "இந்த விவகாரத்தில், தைவான் பிரிவினைவாதப் படைகள் எத்தனை சாதாரண மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டாலும், எத்தனை அமெரிக்க ஆயுதங்களைச் செலவழித்தாலும், தைவான் பிரச்சனையைத் தீர்க்கும் நமது உறுதிப்பாட்டில் ஒருபோதும் பின்வாங்கப் போவது இல்லை. நமது தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் உறுதியான விருப்பத்தை அசைக்க முடியாது.

அவர்களின் நடவடிக்கைகள் தைவானை ஒரு ஆயுத கிடங்கு மற்றும் வெடிமருந்து கிடங்காக மாற்றுவதாக உள்ளது. தைவான் ஜலசந்தியில் போர் அச்சுறுத்தலை உருவாக்கி, மோசமான சூழலை உருவாக்க வழிவகுக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (PLA), சமீப காலமாக, தைவானை இலக்காகக் கொண்டு அதன் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. தைவான் வான்வெளியில், தன் இருப்பை காட்ட போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தொடர்ந்து சீனா அனுப்பி வருகிறது.

தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், அந்நாட்டின் கடற்பகுதியில் ஆறு சீன கடற்படைக் கப்பல்களைக் கண்காணித்ததாக, ஜூலை 30ஆம் தேதி தெரிவித்து உள்ளது. ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைமையிலான தைவானின் ஆளும் நிர்வாகம், சீனப் படையெடுப்பிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதை முடுக்கிவிட்டு உள்ளது.

1949ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் சீனாவும் தைவானும் பிரிந்தன. மேலும் தைவான், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒருபோதும் ஆளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய ராணுவ கொள்முதலை போல அல்லாமல், தற்போதைய அமெரிக்க ராணுவ கையிருப்புகளிலிருந்து ஆயுதங்களை எடுப்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அதிகாரத்தின் ஒரு பகுதியாக சமீபத்திய தொகுப்பு உதவியாக இவை உள்ளது.

எனவே தைவான் ராணுவ உற்பத்தி மற்றும் விற்பனைக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. தைவான் 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கியிருந்தாலும், அதில் பெரும்பாலானவை இன்னும் தைவானுக்கு வழங்கப்படவில்லை. வான் பாதுகாப்பு அமைப்புகள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு திறன்கள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளை தைவானுக்கு, அமெரிக்கா விரைவில் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ட்விட்டர் தலைமையகத்தில் 'X' லோகோ: அனுமதி மீறல் குறித்து விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.